மேலும் செய்திகள்
மஞ்சுவிரட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
19-Apr-2025
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியில் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.பேராவூரணி பொன்காடு நீலகண்டன் தாக்கல் செய்த மனு: சில ஒப்பந்ததாரர்கள், பேராவூரணி பேரூராட்சியின் சில அலுவலர்களுடன் கூட்டுச்சேர்ந்து பணிகளைச் செய்யாமல் ரூ.ஒரு கோடி பொதுப்பணத்தை மோசடி செய்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், தஞ்சாவூர் டி.எஸ்.பி., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை இல்லை. பேரூராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.அரசு தரப்பு, ஊழல் தடுப்புச்சட்டப்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அனுமதியுடன் விசாரணை துவங்கியுள்ளது,' என தெரிவித்தது.நீதிபதி: லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் முறைகேடு கண்டறியப்பட்டால், தவறு செய்த அலுவலர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
19-Apr-2025