உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்மாய் மாசுபடாமல் பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

கண்மாய் மாசுபடாமல் பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: மதுரை அழகர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: ஒத்தக்கடை அருகே ராஜகம்பீரம் கண்மாயில் குப்பைகள் தேங்கி, கழிவுநீர் கலக்கிறது. நிலத்தடி நீர் மாசடைந்து, நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கண்மாயை துார்வார கலெக்டரிடம் மனு அளித்தோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பி.செந்தில்குமார் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கண்மாய் மாசுபடாதவாறு கழிவு நீர் கலக்காமல் தடுக்க மதுரை கிழக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். ஏற்கனவே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டிருந்தால் மேல் நடவடிக்கை தேவையில்லை. ஆக்கிரமிப்பு இருக்கும்பட்சத்தில் அகற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !