உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: விருதுநகர் மாவட்டம் ஆனையூரில் நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கில் பட்டா வழங்கிய விவகாரம் தொடர்பாக டி.ஆர்.ஓ., விடம் மனு அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.விருதுநகர் மாவட்டம் பெரியசாமி தாக்கல் செய்த மனு: சிவகாசி அருகே ஆனையூரில் ரெட்டிகுளம் கண்மாய் மற்றும் கண்மாய் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டருக்கு 2018ல் மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: மனுதாரர் குறிப்பிடும் ஒரு சர்வே எண் வருவாய்த்துறை பதிவேடுகளின்படி நீர்நிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற 2 சர்வே எண்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதை 4 மாதங்களில் அதிகாரிகள் நிறைவேற்றுவர். மனுதாரர் தரப்பு,'ஒரு சர்வே எண் மட்டுமே நீர்நிலை. மற்ற இரு சர்வே எண்களுக்கு பட்டா வழங்கியது தவறு,' என்கிறது. இம்மாற்றம் யு.டி.ஆரின் போது நடந்ததாக தெரிகிறது. டி.ஆர்.ஓ.,விடம் மனுதாரர் மனு அளிக்க வேண்டும். இயற்கை நீதியின் கொள்கைகளுக்குட்பட்டு டி.ஆர்.ஓ.,இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !