உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்மாய் பூங்காவை பராமரிக்க வழக்கு அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

கண்மாய் பூங்காவை பராமரிக்க வழக்கு அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

மதுரை : மதுரை ஊமச்சிகுளம் கண்மாயை துார்வாரி, பூங்காவை பராமரிக்க தாக்கலான வழக்கில் மாநகராட்சி கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ஊமச்சிகுளம் சுருளிராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் புதுநத்தம் சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. அப்பணியின்போது நாகனாகுளம், திருப்பாலை, ஊமச்சிகுளம் கண்மாய்கள் சீரமைக்கப்பட்டன. சுற்றிலும் பூங்காக்கள், நடைபயிற்சி மேற்கொள்ள பாதைகள் அமைக்கப்பட்டன. பராமரிப்பிற்காக மதுரை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஊமச்சிகுளம் கண்மாய் பூங்காவில் குப்பை, மதுபாட்டில்கள் தேங்கியுள்ளன. தெரு நாய்கள் புகுந்துவிடுகின்றன. புற்கள், செடிகள் முளைத்துள்ளன. அவற்றில் பூச்சிகள் உலவுகின்றன. நடைபாதை சேதமடைந்துள்ளது. கண்மாயை துார்வார வேண்டும். நடைபாதையை சுத்தப்படுத்த வேண்டும். மின் விளக்குகள் அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ வேண்டும். குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். மது அருந்துதல், புகை பிடித்தலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை நிறுவ வேண்டும். பாதுகாவலரை நியமிக்க வேண்டும். பூங்காவை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு மாநகராட்சி கமிஷனர், ஊமச்சிகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்போதைய நிலை குறித்து அக்.29 ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை