உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் மலையில் ஆடு பலியிட அனுமதிக்க கூடாது ஹிந்து மக்கள் கட்சி வேண்டுகோள்

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு பலியிட அனுமதிக்க கூடாது ஹிந்து மக்கள் கட்சி வேண்டுகோள்

மதுரை:'திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, மாடு, கோழி பலியிடும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும்' என, ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் நேற்று போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் வேண்டுகோள் விடுத்தார்.அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை தொன்மையானது.

கிரிவலம்

இம்மலையை பல நுாற்றாண்டுகளாக பக்தர்கள் லிங்க வடிவில் வழிபட்டு, பவுர்ணமிதோறும் கிரிவலம் செல்கின்றனர். மலையின் உச்சியில், காசி விஸ்வநாதர் கோவில், தீபத் துாண், தல விருட்சமான கல்லத்தி மரம் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம், 'திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணிய சுவாமி கோவில்' என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக 2011 முதல் எஸ்.டி.பி.ஐ., என்ற அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்துாண் அருகே கொடி கட்டி பிரச்னை செய்கின்றனர்.சில நாட்களாக, 'திருப்பரங்குன்றம் மலை முழுவதும் எங்களுக்கு சொந்தமானது. மலை மீது ஆடு, மாடு, கோழி, பலி கொடுப்போம்' என்று சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசை மிரட்டும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், 'திருப்பரங்குன்றம் மலையில் தொழுகை நடத்த தடை இல்லை. மலை மீது ஆடு பலி கொடுக்க நீதிமன்றத்தை நாடலாம்' என்றும் கூறி இருக்கின்றனர். நாளை, தடையை மீறி மலை மீது ஆடு பலி கொடுப்போம் என்று தீர்மானம் செய்துள்ளனர்.

அனுமதி

எனவே, சைவ மலையான திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்கும் விதமாக உயிரினங்களை பலி கொடுக்க அனுமதி வழங்கக் கூடாது. மலையைச் சுற்றியுள்ள சமணர் படுகைகளையும், கல்வெட்டுகளையும்பாதுகாக்கும் வகையில், மலை முழுவதையும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை