உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் மலையில் தடை மீறி ஆடு, கோழி அறுத்து சமபந்தி விருந்து? ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பால் போலீஸ் பாதுகாப்பு

திருப்பரங்குன்றம் மலையில் தடை மீறி ஆடு, கோழி அறுத்து சமபந்தி விருந்து? ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பால் போலீஸ் பாதுகாப்பு

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுத்து, முருகபெருமானை அவமதிக்கும் விதமாகவும், ஹிந்துக்கள் மனம் புண்படும் விதமாகவும் தடையை மீறி இன்று ஆடு, கோழி அறுத்து சமபந்தி விருந்து நடத்த போவதாக சில முஸ்லிம் அமைப்புகள் அறிவித்துள்ளதற்கு, ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.சமீபத்தில் மலை மீதுள்ள தர்காவிற்கு சென்ற ஒருவர், ஆடு பலியிட முயன்றதை போலீசார் தடுத்தனர். இதற்கு சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவுவிடம் மணப்பாறை தி.மு.க., -- எம்.எல்.ஏ., அப்துல்சமது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தார். இதற்குரிய பதில் கேட்டு கலெக்டர் சங்கீதாவுக்கு சட்டசபையில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது. தொடர் ஜல்லிக்கட்டு காரணமாக அடுத்த வாரம் பதில் அனுப்ப முடிவு செய்திருந்த நிலையில், சில அமைப்புகள் தடையை மீறி இன்று ஆடு, கோழி அறுத்து சம்பந்தி விருந்து கொடுக்கப்போவதாக அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் மலை மீது யாரும் செல்லாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹிந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் கூறியதாவது:சில நாட்களாக திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும், மலை முழுதும் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்றும், மலை மீது ஆடு, மாடு, கோழி பலி கொடுப்போம் என்றும் கூறி வருகின்றனர்.மலை மீது அத்துமீறி ஆடு வெட்ட முயன்றவர்களை போலீசார் தடுத்ததை, 'வழிபாட்டு உரிமையை பறிப்பதாக' பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக சட்டசபை கூட்டத்தொடரில், 'திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் தொழுகை நடத்த எந்த தடையும் இல்லை. மலை மீது ஆடு பலி கொடுக்க வேண்டுமென்றால் நீதிமன்றத்தை நாடலாம்' என, தெரிவிக்கப்பட்டது.அதை மீறி, 'சமூகநல்லிணக்கத்திற்கான சமபந்தி விருந்து' என்ற போர்வையில் மலை மீது உயிரினங்களை பலி கொடுக்க திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ள செயல் கண்டிக்கத்தக்கது. இது முருகப்பெருமானை அவமதிக்கும் செயல்.சட்டம் ஒழுங்கு பிரச்னையையும், மத மோதலையும் உண்டாக்க வேண்டுமென்றே திட்டமிட்டு செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

veera
ஜன 18, 2025 14:00

அங்கே ஒன்னும் இல்லை... போன வாரம் தான் வைகுண்டம் போயிட்டு வந்தாரு


அன்பே சிவம்
ஜன 18, 2025 11:26

1). நரபலி ஜெயலலிதா காலத்தில் எல்லா மத வழிபாட்டு தலங்களில் தடை செய்யப்பட்டு உள்ளது.வீட்டில் வெட்டி சாப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயம். 2). நரபலி சட்ட பிரகாரம் தடை செய்யப்பட்டு உள்ளது என சட்டசபையிலே சொல்லி இருந்தால் இவ்வளவு தூரம் பிரச்னை வந்து இருக்காது. 3). ஒட்டு அரசியல் ஆக எல்லா திராவிட, Tamilnadu கட்சிகள் மற்றும் நேஷனல் கட்சிகள் சட்டசபையில் அமைதியாக அமருந்து இருந்ததால் இந்த சூழல் உருவானது. 4).நண்டு கொலுத்தால் வலையில் தங்காது என்பது பழமொழி. 5). யார் சண்டைக்கு வந்தாலும் அவர்களிடம் பொருளாதர ரீதியாக No கொடுக்கல் வாங்கல். 6).அப்புறம் பாருங்க எல்லாம் நல்லபடியாக சுமூகமாக entire சமுதாயம் இயங்கும்.


பேசும் தமிழன்
ஜன 18, 2025 10:52

மார்க்க ஆட்கள் எங்கே இரு‌ந்தாலு‌ம்.... தங்கள் வேலையை காட்டி விடுவார்கள்..... அவர்களை கொஞ்சம் தூரத்தில் வைப்பது தான் அனைவருக்கும் நல்லது.


Srprd
ஜன 18, 2025 10:33

எப்படியாவது மதப் பிரச்சினையை உருவாக்கி, மதக் கலவரத்தை ஆரம்பிக்கப் பார்க்கின்றனர். இவர்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது.


அப்பாவி
ஜன 18, 2025 08:49

நரபலி ஒண்ணுதாண்டா பாக்கி...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை