உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கல்

விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கல்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு அடையாள எண் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது: விவசாயிகள் பல்வேறு மானிய திட்டங்கள் பெறுவதற்கு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு முறையும் ஆவணங்களை வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதை எளிதாக்க ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்தனியே அடையாள எண் வழங்கும் பணி நடக்கிறது. இதன் மூலம் அனைத்து விவசாய நலத்திட்ட உதவிகளும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படும். கிராமங்களில் வேளாண் அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், சமுதாய வள பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் ஆதார், கணினி சிட்டா மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை