சட்டவிரோத குவாரி வழக்கு: கலெக்டர் ஆய்விற்கு உத்தரவு
மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் குளத்துார் அருகே தெம்மாவூர் கராத்தேமுத்து. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தெம்மாவூரிலுள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நீர்நிலைகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் அள்ளப்படுகிறது. கலெக்டர், கனிமவளத்துறை உதவி இயக்குனரிடம் புகார் அளித்தோம். குவாரிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பரஞ்ஜோதி ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கலெக்டர் ஆய்வு செய்து குவாரி தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய நிலை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.