உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பருப்பு விலை ஏற்றம் லோக்சபா தேர்தலில் நோட்டாவுக்கு ஓட்டு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் அறிக்கை 

பருப்பு விலை ஏற்றம் லோக்சபா தேர்தலில் நோட்டாவுக்கு ஓட்டு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் அறிக்கை 

மதுரை: ''பருப்பு விலை ஏற்றத்தை தடுக்காவிட்டால் லோக்சபா தேர்தலில் ஓட்டுக்களை நோட்டாவுக்கு வழங்கப் போவதாக'' தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது குறித்து மாநில தலைவர் திருமுருகன் அறிக்கை: கடந்த ஆறுமாதங்களாக உளுந்தம் பருப்பு விலை அதிகரித்துள்ளது. இத்தொழிலை நம்பி இருக்கும் நுாற்றுக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள், 10 க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி மானியத்தில் கொள்முதல் செய்து வழங்குதல் வேண்டும். மாநில அரசின் மின்கட்டணம் உயர்வு, மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, டோல்கேட் என தொடர்ந்து அப்பளத் தொழில் வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலை நீடித்தால் 40 சதவீத நிறுவனங்கள் மூடப்படும். வாரத்திற்கு மூன்று நாட்கள் வேலை வழங்கிவரும் நிலை ஏற்பட்டுள்ளது.அதிக விலை கொடுத்து பருப்பு வாங்கி சந்தையில் குறைந்த விலைக்கு அப்பளத்தை விற்க முடியாது. தொடர்ந்து வேலை வழங்காததால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. விலை ஏற்ற காரணங்களை இதுவரை அரசு தெளிவு படுத்தவில்லை. இந்நிலை தொடர்ந்தால் லோக்சபா தேர்தலில் சிறுகுறு தொழில் நிறுவனம், தொழிலாளர்கள் குடும்பங்களின் ஓட்டுகள் நோட்டாவுக்கு செல்லும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ