மேலும் செய்திகள்
விவசாய கூலி உயர்வால் தவிக்கும் விவசாயிகள்
22-Nov-2024
வாடிப்பட்டி : வாடிப்பட்டி தாலுகாவில் தொடரும் நெல் விவசாய பணிகளால் உழவு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இத்தாலுகாவில் வைகை பெரியாறு பாசனத்தில் இருபோக நெல் விவசாயம் அதிகளவில் நடக்கிறது. சில ஆண்டுகளாக தொடர்ந்து கிடைக்கும் மழையால் விவசாய நில பரப்பு மற்றும் பணிகள் அதிகரித்துள்ளது. உழவு, நடவு, மருந்து தெளிப்பு பணிகளுக்கு இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் விவசாயிகள் நெல் நடவுக்கு முன் வயலை நடவுக்காக பண்படுத்தி பரம்படித்தல் எனும் சமன் செய்யும்போது இயந்திரத்தை பலர் விரும்புவதில்லை. அப்பணிகளுக்கு பாரம்பரிய முறையில் உழவு மாடுகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் விவசாய பரப்பு அதிகரித்துள்ள கிராமப்புறங்களில் குறைந்து வந்த உழவு மாடுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக மாடு வளர்ப்போர் தெரிவித்தனர்.அய்யங்கோட்டை ஆனந்தராஜ்: முன்பெல்லாம் விவசாயிகளின் வீடுகள் தோறும் உழவு மாடுகள் இருந்தன. டிராக்டர் போன்ற இயந்திரங்கள் வரவால் மாடுகள் எண்ணிக்கை குறைந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. எங்கள் கிராமத்தில் 6 ஜோடி மாடுகள் இருந்தன. தற்போது 10க்கும் மேற்பட்ட ஜோடிகள் உள்ளன. இப்படி பல கிராமங்களில் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன என்றார்.
22-Nov-2024