உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இந்தோனேசியா ஸ்கேட்டிங் உசிலை பள்ளிக்கு 3ம் இடம்

இந்தோனேசியா ஸ்கேட்டிங் உசிலை பள்ளிக்கு 3ம் இடம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி கீழப்புதுார் கார்த்திக் -இந்திரா தம்பதியர் மகன் வியாஷ்ஆத்விக். உசிலம்பட்டி ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் மே 25ல் இந்தோனேசியாவில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.இதில் 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வியாஷ் ஆத்விக் 200 மீ., போட்டியில் மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கமும், 500 மீ., போட்டியில் நான்காமிடமும் பெற்றுள்ளார்.வியாஷ்ஆத்விக்கை பள்ளித் தாளாளர் காசிமாயன், இயக்குநர் ஜெயகிஷோர்குமார், முதல்வர் ஜோதிலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ