உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவமனைகளில் பணியாளர் பற்றாக்குறையால் நோய் தொற்று: அ.தி.மு.க., மருத்துவரணி குற்றச்சாட்டு

மருத்துவமனைகளில் பணியாளர் பற்றாக்குறையால் நோய் தொற்று: அ.தி.மு.க., மருத்துவரணி குற்றச்சாட்டு

மதுரை: சுகாதாரத் துறையில் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் நோய் தீர்க்க செல்லும் மக்களுக்கு கூடுதல் நோய் பெறும் அவல நிலை உள்ளது என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார். மதுரையில் அவர் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள் பற்றாக்குறையால் உள்நோயாளிகள் பிரிவில் படுக்கை விரிப்புகளால் மூடப்பட்டுள்ளன. நோயாளிகள் சிகிச்சைப் பெற்ற பின் அவை மாற்றப்படுவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. புதிய உள்நோயாளிகள் பழைய படுக்கை விரிப்பையே தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னும் படுக்கை விரிப்புகள் மாற்றப்படாமல் இருப்பதால் ரத்தக்கறை, மருந்துகள், நோயாளிகளின் வியர்வை, உணவுத் துகள்கள் காணப்படுகின்றன. அரசு மருத்துவமனைக்கு நோயை தீர்க்க போகும் மக்களுக்கு தற்போது கூடுதலாக நோயை வாங்கும் நிலை உருவாகியுள்ளது.தமிழகத்தில் 2050 டயாலிசிஸ் கருவிகள் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உள்ளன. 3 பேருக்கு ஒரு டயாலிசிஸ் தொழில்நுட்பவினர் இருக்க வேண்டும். ஆனால் இல்லை. பயிற்சி மாணவர்களை டயாலிசிஸ் செய்ய பயன்படுத்துவதால் சில நேரங்களில் முறையாக ஊசி செலுத்தப்படாமல் நோயாளிகள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் தமிழக சுகாதாரத்துறை 12 வது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளது. அமைச்சரோ மருத்துவமனைகளில் விளம்பரத்திற்காக ஆய்வு மேற்கொள்கிறாரே தவிர முன்னேற்றத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ