உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திரவத்தங்கமான தண்ணீரை பாதுகாக்க வேண்டும் கருத்தரங்கில் தகவல்

திரவத்தங்கமான தண்ணீரை பாதுகாக்க வேண்டும் கருத்தரங்கில் தகவல்

மதுரை : ''திரவத் தங்கமான தண்ணீரை பாதுகாக்க வேண்டியது அவசியம்'' என மதுரையில் நடந்த கருத்தரங்கில் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர் சத்யகோபால் பேசினார். மதுரையில் தானம் அறக் கட்டளை சார்பில் 5 நாள் நடக்கும் கூடலரங்கம், தலைவர் பங்கேரா தலைமையில் நேற்று துவங்கி யது. தானம் அகாடமி இயக்கு நர் குருநாதன் வரவேற்றார். சத்யகோபால் பேசியதாவது: சில ஆண்டு களாக பெரும் பாலான நீர்நிலைகள் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளன. கண்மாய்களில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. திடக் கழிவுகள், மருத்துவக் கழிவுகளை கொட்டுதல், ஆக்கிரமிப்புகளால் நீர்நிலைகள் அழிந்து வருகின்றன. முன்பு அரசு சார்பில் கட்டடங்கள், குடியிருப்பு வளாகங்கள், பஸ் ஸ்டாண்டு போன்றவை நீர் நிலைகளில் கட்டப்பட்டன. உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் போன்றவை நீர்நிலைகள், நீர் வழிகள், ஈர நிலங்களை பாதுகாப்பதில் தீவிர மாக உள்ளன. அரசு நிர்வாகம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும். தண்ணீர், ஒரு திரவத் தங்கம். அதன் முக்கியத்துவத்தை பள்ளிப் பருவத்தில் இருந்தே மனதில் விதைக்க வேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும் முருங்கை, பப்பாளி, நெல்லி, கறிவேப்பிலை மரங்களை வளர்க்க வேண்டும். இதன்மூலம் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு மழைப் பொழிவு அதிகரிப்பதோடு பெண்களின் ரத்த சோகைக்கும் மருந்தாக அமையும். இவ்வாறு பேசினார். அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் வாசிமலை, திட்டத் தலைவர் சிவானந்தன், கனரா வங்கி துணைப் பொது மேலாளர் சந்தீப் குமார் சின்ஹா பேசினர். திட்டத் தலைவர் மதன் குமார் நன்றி கூறினார். களஞ்சியம் இயக்கத் தலைவி சின்னப்பிள்ளை, வயலக பரஸ்பர இயக்கம் பொருளாளர் பூஜாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை