உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விபத்தில் பலியானதற்கு இழப்பீடு  உயர்நீதிமன்றத்தில் தகவல்

 விபத்தில் பலியானதற்கு இழப்பீடு  உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை : புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் விபத்தில் பலியானதற்கு இழப்பீடு கோரியதில்,' மனுதாரரின் மனு மூப்புத் தன்மை அடிப்படையில் பரிசீலனைக்கு வரும்போது, ​​இழப்பீடு வழங்கப்படும்,'என அரசு தரப்பு கூறியதை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை பைசல் செய்தது.புதுக்கோட்டை மாவட்டம் வேலம்மாள் தாக்கல் செய்த மனு:எனது மகன் பிரபாகரன் 2024 ல் திருச்சி-- - புதுக்கோட்டை சாலையில் விபத்தில் இறந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் எனக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.அரசு தரப்பு வழக்கறிஞர்: போலீசார் கலெக்டருக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். மனுதாரரின் மனுவிற்கு பதிவு எண் ஒதுக்கப்பட்டுள்ளது. மூப்பு பட்டியல், மற்றும் நிதி இருப்பை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்கப்படுகிறது. மனுதாரரின் மனு மூப்புத் தன்மை (சீனியாரிட்டி) அடிப்படையில் பரிசீலனைக்கு வரும்போது, ​​இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை பைசல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !