உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெயரளவில் செயல்படும் கிராமசபை பஞ்., ராஜ் விழாவில் தகவல்

பெயரளவில் செயல்படும் கிராமசபை பஞ்., ராஜ் விழாவில் தகவல்

மதுரை: ''ஊரக பகுதிகளில் கிராம சபை பெயரளவில் மட்டுமே செயல்படுவதால் பல திட்டங்கள் அங்கு சென்றடைவதில்லை'' என தானம் பஞ்சாயத்து மேம்பாட்டு அறக்கட்டளை விழாவில் மூத்த திட்டத் தலைவர் சிங்கராயர் பேசினார்.மதுரையில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழா நடந்தது. அறக்கட்டளையின் தமிழக சி.இ.ஓ., சாந்தி வரவேற்றார். இதில்சிங்கராயர் பேசியதாவது:தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் செயல்படுகின்றன. கிராம சபை, வளர்ச்சித் திட்டங்கள், பெண்கள் முன்னேற்றம் பாகுபாடின்றி அனைவரையும் ஒன்றிணைப்பதே இதன் நோக்கம். தற்போது பெயரளவில் மட்டுமே கிராம சபைகள் நடக்கின்றன. பஞ்சாயத்து தலைவர் திட்டங்களை வளர்ச்சியை நோக்கி செயல்படுத்த வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகாரிகள் மாற்றப்படுவதால் வேலையை பற்றிய புரிதல் ஏற்பட பல ஆண்டுகள் ஆகும். எனவே மக்களுக்கு அனைத்தும் தெரிந்திருப்பது அவசியம். முக்கிய பொறுப்புகளில் பெண்கள் தங்கள் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். சுற்றுச்சுழலை பாதுகாக்க மரக்கன்று நட வேண்டும். திட்டங்களை முறையாக செயல்படுத்தும் பஞ்சாயத்திற்கு அரசு பல விருதுகளை வழங்குகிறது. என்றார்.கிராம சபை அடிப்படை கேள்விகளும் பதில்களும்', சங்க தலைமை பொறுப்பாளர்களின் கடமைகள், பொறுப்புகள் வழிகாட்டி'புத்தகங்களை டிரஸ்டி செந்தாமரை வெளியிட்டார். செல்வராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி