உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மன நலனில் வேண்டும் அக்கறை கருத்தரங்கில் தகவல்

மன நலனில் வேண்டும் அக்கறை கருத்தரங்கில் தகவல்

மதுரை : 'மன நலனில் அக்கறையுடன் இருப்பது அவசியம்' என சர்வதேச கருத்தரங்கில் எம்.எஸ்., செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் பேசினார்.மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் உளவியல் துறை சார்பில் மனநலன் குறித்த கருத்தரங்க துவக்க விழா முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமையில் நடந்தது. பேராசிரியர் ஸ்னேகா வரவேற்றார்.இதில் சிறப்பு விருந்தினர் டாக்டர் ராமசுப்பிரமணியன் பேசியதாவது: சர்வதேச அளவில் மனநலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் லட்சக் கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர்.மனஅழுத்தம் சரிசெய்யக் கூடியது. எளிதில் கண்டுபிடிக்கக் கூடியது. அதையே ஒரு அழுத்தமாக மாற்றத்தேவையில்லை. வெற்றியாளர்கள் வித்தியாசமாக எதையும் செய்ய மாட்டார்கள். வித்யாசமான செயல்களால் வெற்றியாளர் ஆனார்கள். நாம் மனநலனில் அக்கறையுடன் இருப்பது அவசியம். எதைச் செய்தாலும் கடின உழைப்பு, ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்றார்.சி.எஸ்.ஐ., கல்லுாரி முதல்வர் ஜோதி சோபியா, மீனாட்சி கல்லுாரி பேராசிரியை ஹெலன் கிறிஸ்டினா பங்கேற்றனர். சென்னை, திருநெல்வேலி உள்பட பல்வேறு பகுதி கல்லுாரி மாணவர்களின் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. பேராசிரியை கலை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை