உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு கல்லுாரிகளில் மாற்று பணியில் உபரி பேராசிரியர்கள் திரும்ப பெற வலியுறுத்தல்

அரசு கல்லுாரிகளில் மாற்று பணியில் உபரி பேராசிரியர்கள் திரும்ப பெற வலியுறுத்தல்

மதுரை : மதுரையில் தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர்கள் கழக கிளைத் தலைவர் முத்துச்செல்வி கூறியதாவது:அண்ணாமலை பல்கலையில் உரிய அறிவிப்பின்றியும், இனச்சுழற்சியை பின்பற்றாமலும் நியமிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்களை 2016 முதல் தமிழகத்தில் உள்ள 150 அரசு கல்லுாரிகளில் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டனர். மாற்றுப்பணியில் நீடிப்பதால் அப்பணியிடங்களுக்கு பல ஆண்டுகளாக முறையான உதவி பேராசிரியர்கள் நியமன அறிவிப்புகள் வெளியிடவில்லை.இதனால் உரிய தகுதியுடன் உள்ளவர்கள் பல ஆண்டுகளாக உதவி பேராசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கான பணி நியமனம் மறுக்கப்பட்டுள்ளது.சிதம்பரம், கடலுார் உள்ளிட்ட பல மாவட்ட அரசு கல்லுாரிகளில் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்ட இவ்வகை உபரி பேராசிரியர்கள் 80 சதவீதம் பணியில் உள்ளனர். இதனால் முறையாக பணி நியமனம் பெற்ற ஆயிரக்கணக்கான அரசு கல்லுாரி பேராசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பதவி உயர்வு உள்ளிட்ட பல குளறுபடிகள் ஏற்படும் சூழல் உள்ளது. இந்த உபரி பேராசிரியர்கள் அனைவரும் பல்கலையில் இருந்து வந்தவர்கள். எனவே அவர்களை மீண்டும் பல்கலைகளிலேயே பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ