மேலும் செய்திகள்
எங்க வீட்டுக் குழாயில் எப்ப தண்ணீர் வரும்
08-Jul-2025
சோழவந்தான்: செல்லம்பட்டி ஒன்றியம் உடன் காட்டுப்பட்டி தெருக்களில் ரோட்டை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.அப்பகுதியைச் சேர்ந்த நல்ல தம்பி கூறியதாவது: இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சில பகுதிகளில் ரோடு அமைத்தனர். ரோடு அமைத்து நீண்ட நாட்கள் ஆனது, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் போன்றவற்றால் ரோடு சேதம் அடைந்து மேடு பள்ளமாக உள்ளது. இந்த ரோட்டில் வாகனங்கள் சரிவர செல்ல முடியாமல் சறுக்கி விபத்தை சந்திக்கின்றன. குழந்தைகள், வயதானோர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். தெருக்களில் சிமென்ட் அல்லது தார் ரோடு அமைத்து தர வேண்டும் என்றார்.
08-Jul-2025