உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு

ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு

மதுரை: தமிழக வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான கணக்கெடுப்பின் முதல் கட்டமாக நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு மார்ச் 9ல் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக சமவெளிப் பறவைகள் கணக்கெடுப்பு மார்ச் 15, 16ல் நடந்தது.மதுரை மாவட்டத்தில் அரிட்டாபட்டி, இடையப்பட்டி, யானைமலை, பசுமலை உள்ளிட்ட பகுதிகள், எழுமலை, மண்ணாடிமங்கலம், வெள்ளிமலை உள்ளிட்ட வனப்பகுதிகள் என 25 இடங்களில் சமவெளிப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தது. மல்கோஹா, கொண்டலாத்தி, ஆள்காட்டி குருவி, மைனா, பருந்து, மரங்கொத்தி, மயில், ஆந்தை, கூகை பறவைகள் உட்பட பல்வேறு பறவை இனங்கள் கணக்கெடுக்கப்பட்டன. மாவட்ட வன அதிகாரி தருண்குமார் தலைமையில் உதவி வனப் பாதுகாவலர் ஸ்ரீனிவாசன், வனச்சரக அலுவலர்கள் சாருமதி, சிக்கந்தர் பாட்ஷா, வெங்கடேஸ்வரன், அன்னக்கொடி, அருணாச்சல பூபதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள், பறவை வல்லுநர்கள், கர்ணன் உள்ளிட்ட தன்னார்வலர்கள், 100க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி