உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாற்று பறிப்பும் நடவும் தீவிரம்

நாற்று பறிப்பும் நடவும் தீவிரம்

அலங்காநல்லுார்; வாடிப்பட்டி தாலுகாவில் நெல் நடவுக்காக நாற்றுக்களை பறிக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இத்தாலுகாவில் முதல் போகத்திற்கு வைகை பெரியாறு கால்வாய் பாசனம் ஜூன் 15ல் திறக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி விவசாயிகள் விளை நிலங்களில் உழவுப் பணிகள் செய்து நாற்றங்கால் அமைத்தனர். தற்போது விவசாய தொழிலாளர்கள் வளர்ந்துள்ள நெல் நாற்றுக்களை பறித்து வருகின்றனர். அவற்றை சிறிய சிறிய கட்டுகளாக கட்டி நடவு செய்யும் நிலங்களுக்கு டிராக்டர் உட்பட வாகனங்களில் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிணற்று பாசன வசதியுள்ள விவசாயிகள் முன்னதாகவே நடவு இயந்திரங்கள், தொழிலாளர்கள் மூலம் நடவு பணியை முடித்து முதல் களை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை