உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டிச.6 முதல் 10 வரை சர்வதேச ஆவணப்படம், குறும்பட விழா

டிச.6 முதல் 10 வரை சர்வதேச ஆவணப்படம், குறும்பட விழா

மதுரை: மதுரையில் 26வது சர்வதேச ஆவணப்படம், குறும்பட விழா டிச. 6 முதல் 10 வரை பல்வேறு இடங்களில் நடக்க உள்ளது.மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம், திண்டுக்கல்லின் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், மறுபக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் விழாவை ஒருங்கிணைக்கின்றன.டிச.6ல் ரிசர்வ்லைன் மதுரை மீடியா, பிலிம் ஸ்டடீஸ் அகாடமி, திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் காலை 10:30 முதல் மாலை 4:30 மணி வரை விழா நடக்கிறது.டிச. 7ல் மூட்டா அரங்கில் காலை11:00 முதல் இரவு 8:00 மணி வரை, டிச. 8 ல் சிந்தாமணி ரோடு ஐடியாஸ் சென்டரில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி, டிச., 9ல் கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரியில் காலை 9:30 முதல் மாலை 4:30 மணி, டிச. 10ல் மதுரை காமராஜ் பல்கலையில் காலை 10:30 முதல் மாலை 4:00 மணி, திண்டுக்கல் அனுகிரஹா கல்லுாரியில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை பகல் நேர நிகழ்ச்சிகள் நடக்கிறது.டிச., 6 முதல் 10 வரை ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி, அய்யர்பங்களா கலைடாஸ்கோப்பில் மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி, லென்ஸ் மீடியா சென்டரில் மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை மாலை நேர நிகழ்ச்சிகள் நடக்கிறது.22 நாடுகளில் இருந்து, 30 தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பங்கேற்கின்றனர். 78 இந்திய சர்வதேச ஆவணப்படங்கள், குறுகிய புனை கதைகள், அனிமேஷன் படங்கள், இசை காணொலிகள், சோதனை முறையிலான படங்கள் திரையிடப்படும். அனுமதி இலவசம். விவரங்களுக்கு: 99406 42044.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை