மேலும் செய்திகள்
கால்நடை கணக்கெடுப்பு பணி ஆய்வு
20-Jan-2025
மதுரை : மதுரை கால்நடை அரசு பன்முக மருத்துவமனையில் திருமங்கலத்தைச் சேர்ந்த ஐந்துமாத நாய்க்குட்டிக்கு குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அறுவை சிகிச்சை செய்த கால்நடை டாக்டர்கள் மெரில்ராஜ், முத்துராம், குருசாமி கூறியதாவது: நாட்டு இனத்தைச் சேர்ந்த ஐந்து மாத நாய்க்குட்டி வீட்டைச் சுற்றிக் கிடந்த கல், மண்ணை தின்றதால் ஆசனவாய் பகுதியில் குடல் பிதுங்கிய நிலையில் இருந்தது. திருமங்கலம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். தல்லாகுளம் அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது சிறுகுடல், பெருங்குடல் இணையும் இடத்தில் குடல் முறுக்கி, திரும்பியிருந்தது. ரத்தஓட்டம் இல்லாமல் அழுகி விட்டது. உடனடியாக அந்த பகுதியை வெட்டி எடுத்து மீண்டும் குடலை இணைத்து அறுவை சிகிச்சை செய்தோம். ஒருவார கண்காணிப்புக்கு பின் நாய்க்குட்டி நன்றாக உள்ளது என்றனர். அவர்களை இணை இயக்குநர் சுப்பையன், துணை இயக்குநர் நந்தகோபால், உதவி இயக்குநர் சரவணன் பாராட்டினர்.
20-Jan-2025