மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ., துாக்கிட்டு தற்கொலை
07-Oct-2025
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் 28, கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன் மீது மதுரையில் வாகனம் மோதியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அஜித் குமார் கொலை வழக்கில் அவரை போலீசார் அடித்து துன்புறுத்திய வீடியோவை வெளியிட்ட அவரது நண்பர் சக்தீஸ்வரனுக்கு கொலை மிரட்டல் இருந்து வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று மதுரை பழமுதிர்சோலை முருகன் கோயிலுக்கு தரிசனத்திற்காக சக்தீஸ்வரன் வந்தார். பின் தனது காரில் வீடு திரும்பிய நிலையில் புதூர் அருகே வாகனம் ஒன்று அவரது காரை இடித்து விட்டு நிற்காமல் சென்றது. இதனால் அச்சமடைந்த சக்தீஸ்வரன் திட்டமிட்டு வாகனத்தை இடித்து விட்டு நிற்காமல் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் புதூர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் மோதியது சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கூரியர் நிறுவன டிரைவர் கார்த்திக் எனத்தெரிந்தது. அவரிடம் விசாரணை நடந்தது. எதிர்பாராத விபத்து என தெரிய வந்ததை தொடர்ந்து அவரிடம் எழுதி வாங்கி போலீசார் அனுப்பினர். சக்தீஸ்வரன் கூறுகையில்,சில நாட்களுக்கு முன்பு அஜித்குமார் கொல்லப்பட்டது குறித்து வழக்கு தொடர்ந்த கார்த்திக்ராஜாவுக்கும் இதுபோல ஒரு நிகழ்வு நடந்தது. அது யாரென்று இதுவரை தெரியவில்லை என்றார்.
07-Oct-2025