உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அயோடின் தின விழா

அயோடின் தின விழா

மதுரை: ஒத்தக்கடை அரசு தொடக்க பள்ளியில் கள்ளந்திரி வட்டார அரசு ஆரம்ப சுகாதார மையம் சார்பில் உலக அயோடின் தின விழா நடந்தது. தலைமையாசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் ஜெயராமன் 'அயோடின் உப்பின் அவசியம், அயோடின் குறைவால் ஏற்படும் பாதிப்புகள், மழைக் காலத்தில் பின்பற்ற வேண்டிய நோய்த் தடுப்பு முறைகள்' குறித்து மாணவர்களிடம் விளக்கினார். சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஏற்பாடு செய்தார். ஆசிரியர் மோசஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !