இரிடியம் பண மோசடி புகார் சி.பி.சி.ஐ.டி., சோதனை
சோழவந்தான்: மதுரைமாவட்டம் சோழவந்தான் தொழிலதிபர்கள் மணி (எ)முத்தையா, மருது பாண்டியனுக்கு சொந்தமான எம். வி.எம் நிறுவனங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை நடத்தினர். எம்.வி. எம் குழுமத்திற்கு சொந்தமாக மஹால், பள்ளி, பெட்ரோல் பங்க் உள்ளன. இதன் நிர்வாகி மணி மீது சில ஆண்டுகளுக்கு முன் 'இரிடியம்' குறித்த பண மோசடி புகார் எழுந்தது. அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று இங்கு வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர். காலை 7:00 மணியிலிருந்து 12 மணி நேரம் நடந்த சோதனையில் ஆவணங்கள் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர்.