உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவி

ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவி

மதுரை : மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானிய விலையில் வினியோகிக்கப்படுகிறது.பல கடைகளில் பொருட்கள் வினியோகத்தில் முறைகேடு நடப்பதால், விற்பனையாளர்களால் 'பி.ஓ.எஸ்.,' கருவியில் பதிவு செய்து வழங்கப்படுகிறது. இதில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகையை பதிவு செய்து வழங்குகின்றனர். இதிலும் சில பிரச்னைகள் உள்ளதாக அடிக்கடி புகார் கிளம்பியது.பலருடைய ரேகைகள் முறையாக பதிவாகாததால் பொருட்கள் வாங்கச் செல்கையில் ஒரு நபரே நீண்ட நேரம் விரலை மாற்றி, மாற்றி வைத்தும் பதிவாகாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அடிக்கடி புகார்கள் சென்றதால் அரசு குடும்ப அட்டைதாரர்களின் கருவிழிகளை பதிவு செய்யும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.மாவட்ட வினியோக அலுவலர் ரவிக்குமார் கூறுகையில், ''மாவட்டத்தில் 1152 கடைகளில் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. பகுதி நேர கடைகள் 237 ல் இதுவரை 18 கடைகளுக்கு கருவி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற கடைகளுக்கும் வழங்கப்படும். இக்கடைகளில் பதிவில் பிரச்னை வந்தால் அருகில் உள்ள கடைகளில் பதிவு செய்து கொள்ளலாம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை