மேலும் செய்திகள்
மஹா., கட்டட விபத்து பலி 17 ஆக உயர்வு
29-Aug-2025
ஆலையில் வெடி விபத்து மஹா.,வில் ஒருவர் பலி
05-Sep-2025
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூர் புறநகர் பகுதியில் உள்ள சில்தாரா பகுதியில் கோதாவரி இஸ்பாட் தனியார் இரும்பு ஆலை உள்ளது. நேற்று இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; ஆறு பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து போலீசாருடன் மீட்புப் படையினர் அங்கு வந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ஆறு பேரின் சடலங்களையும் மீட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் தொடர்ந்து மீட்புப்பணி நடக்கிறது. கட்டட விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
29-Aug-2025
05-Sep-2025