உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொருந்தாத இடத்தில் பொருந்தாத திசையில் சர்வதேச நீச்சல் குளம்: மதுரையில் ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கீடு வீணாகப்போகிறதா

பொருந்தாத இடத்தில் பொருந்தாத திசையில் சர்வதேச நீச்சல் குளம்: மதுரையில் ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கீடு வீணாகப்போகிறதா

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் அமைக்கும் திட்டம் கிடப்பில் இருப்பதாக 4 நாட்களுக்கு முன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் நேற்று முன்தினம் துணை முதல்வர் உதயநிதி காணொலி மூலம் ரூ.10.5 கோடி மதிப்பில் சர்வதேச நீச்சல் குளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.ஆனால் இதற்கான இடத்தேர்வும் திசையும் சர்வதேச விதிகளுக்கு பொருத்தமாக இல்லை என நீச்சல் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாவட்ட சங்க செயலாளர் கண்ணன் தெரிவிக்கின்றனர்.அவர்கள் கூறியதாவது: ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பே தற்போதுள்ள 25 மீட்டர் நீச்சல் குளத்தின் அருகிலேயே சர்வதேச நீச்சல் குளத்திற்கான இடம் ஒதுக்கப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்டது. தற்போது விளையாட்டு மாணவர் விடுதி அருகில் சர்வதேச நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவறான முயற்சி. சர்வதேச நீச்சல் குளம் அமைக்கும் இடத்திற்கு அருகிலேயே பயிற்சிக்கான நீச்சல் குளம் இருக்க வேண்டும். இரண்டும் அருகருகே இருந்தால் தான் போட்டிக்கு முன்பாக வீரர், வீராங்கனைகள் 'பிராக்டீஸ்' குளத்தில் பயிற்சி பெற்று அதன் பின் போட்டியில் பங்கேற்க முடியும். நீச்சல்குளம் என்பது எப்போதும் வடக்கு தெற்கு பார்த்த திசையில் அமைய வேண்டும்.தேர்வு செய்யப்பட்ட இடம் கிழக்கு மேற்கு அமைந்தால் நீந்தும் போது முகத்தில் சூரிய வெளிச்சம் படுவதால் போட்டியாளர்கள் துல்லியமாக நீந்த முடியாது. எனவே போட்டியின் திசையே மாறிவிடும். பார்வையாளர்களுக்கான கேலரி அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு இதில் உள்ளதா என்றும் தெரியவில்லை. 20 அடி ஆழத்திற்கான 'டைவிங்' வசதி மட்டுமே அமைக்கப்பட உள்ளது. இப்போது தேர்வு செய்துள்ள இடத்தில் தான் மாணவர்கள் கால்பந்து விளையாட்டு பயிற்சி பெறுகின்றனர். அந்த இடத்தையும் நீச்சல் குளமாக மாற்றி விட்டால் நடந்து செல்வதற்கு கூட 14 ஏக்கர் பரப்பளவில் நிலம் கிடையாது.மேலும் சர்வதேச நீச்சல் குளம் அமைப்பதற்கான 56 மீட்டர் இடம் இருக்ககுமா என்பது சந்தேகம் தான். எனவே பணிகள் துவங்குவதற்கு முன்பாகவே மறுபரிசீலனை செய்து இப்போது உள்ள நீச்சல்குளம் அருகிலேயே இடத்தை தேர்வு செய்தால் உண்மையான சர்வதேச குளம் அமைப்பதற்கான நோக்கம் நிறைவேறும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை