புதுாரில் ஐ.டி.ஐ., மாணவர்கள் மோதல்
மதுரை: மதுரை புதுாரில் அரசு ஐ.டி.ஐ., உள்ளது. இங்கு இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் இடையே 'ஈகோ' பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று மதியம் புதுார் பஸ் ஸ்டாபில் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கட்டிப்புரண்டு சீருடையுடன் சண்டை போட்டனர். அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். புதுார் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார், 12 மாணவர்களை ஸ்டேஷனிற்கு அழைத்துச்சென்றனர். 'நாங்கள் வேடிக்கை பார்த்தவர்கள். சண்டை போட்டவர்கள் ஓடிவிட்டனர்' என மாணவர்கள் சமாளித்தனர். அவர்களின் எதிர்காலம் கருதி அறிவுரைகள் கூறி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.