உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறுவாலைக்கு மதியம் வரை மட்டுமே பஸ்; டூவீலரில் லிப்ட் கேட்டு பயணிக்கும் பரிதாபம்

சிறுவாலைக்கு மதியம் வரை மட்டுமே பஸ்; டூவீலரில் லிப்ட் கேட்டு பயணிக்கும் பரிதாபம்

அலங்காநல்லுார் : மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து சிறுவாலைக்கு இயக்கப்படும் பஸ் மதியத்திற்கு மேல் இரவு வரை இயக்கப்படாததால் கிராமமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.இக்கிராமத்திற்கு காலை முதல் இரவு வரை இயக்கப்படும் அரசு பஸ்களால் பள்ளி கல்லுாரி மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் பயனடைகின்றனர்.கொரோனாவிற்கு பின் எல்லீஸ் நகர் பணிமனை பஸ் மதியம் 1:50 முதல் இரவு 9:20 வரை 5 நடைகளை 'கட்' செய்துள்ளனர். புகார் செய்தால் அடுத்த ஓரிரு நாட்கள் மட்டுமே பஸ் வரும். டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை என்றனர். தற்போது பயணிகள் குறைவு என அதிகாரிகள் புகாரை திருப்புவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.பிள்ளையார் நத்தம் சண்முகநாதன்: குமாரம் பிரிவிலிருந்து சிறுவாலை வரை 7 கிராமங்கள், 3 கிராம பிரிவுகள் உள்ளன.பஸ் வசதியின்றி தினமும் சிரமப்படுகிறோம். இரவில் ேஷர் ஆட்டோ வசதி கூட இல்லை. மதுரை நகர் கடைகளில் இரவு 9:00 மணிக்கு தான் வேலை முடியும்.இரவு பஸ் இல்லாததால் குமாரம் பிரிவில் இருந்து டூவீலரில் 'லிப்ட்' கேட்டு செல்லும் போது விபத்தும் நடக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ