உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரோடு அமைத்து 16 ஆண்டாச்சுது; வாழ்க்கையே முடங்கி போச்சுது

ரோடு அமைத்து 16 ஆண்டாச்சுது; வாழ்க்கையே முடங்கி போச்சுது

மேலுார் : கட்டகாளைப்பட்டியில் ரோடு முழுவதுமாக சிதிலமடைந்து ஜல்லிக் கற்களாக மாறியதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.அம்பலக்காரன்பட்டி ஊராட்சி கட்டகாளை பட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கிராமத்தினர் தங்கள் அவசிய தேவை, விளை பொருள் விற்பனை, கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு 2 கி.மீ., தொலைவில் உள்ள சிவகங்கை மெயின் ரோடுக்கு சென்று, அங்கிருந்து மேலுார், சிவகங்கை செல்ல வேண்டும்.இந்த ரோடு அமைத்து 16 ஆண்டுகளாகிவிட்டதால் முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. பொதுமக்கள், வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. அதனால் தனித்தீவு போல கிராமமே முடங்கி கிடப்பதாக மக்கள் குமுறுகின்றனர்.அப்பகுதியைச் சேர்ந்த ராஜா கூறியதாவது : தார் ரோடு முற்றிலும் பெயர்ந்து ஜல்லிக்கற்களாக மாறியதால் கல்விநிறுவன பஸ்கள், ஆம்புலன்ஸ் கிராமத்திற்குள் வர மறுக்கின்றன. உடல்நிலை சரியில்லாதவர்களை டூவீலரில் மெயின் ரோடுக்கு கொண்டு சென்று மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்புவதற்குள் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. மாணவர்களை பள்ளி வேனில் அனுப்புவதற்கும், குடும்பத்துடன் டூவீலரில் செல்லும் போதும் நிலை தடுமாறி விழுவதால் காயமடைகிறோம். வாகன டயர் அடிக்கடி பழுதாகிறது. 6 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு புதிய அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை