உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஜாக்டோ ஜியோ வாகன பிரசாரம்

 ஜாக்டோ ஜியோ வாகன பிரசாரம்

மதுரை: முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலியிடங்களை நிரப்ப வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்சங்களை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராடி வருகின்றனர். இதற்காக நவ.18 ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடக்க உள்ளது. இதில் அரசு ஊழியர், ஆசிரியர்களை பங்கேற்க செய்வதற்காக, பிரசாரம் மேற்கொண்டனர். வாடிப்பட்டி, அலங்காநல்லுார் ஒன்றியங்களில் சோழவந்தான், வாடிப்பட்டி, பாண்டியராஜபுரம், அலங்காநல்லுார் உட்பட பல பள்ளிகளிலும், ஒன்றிய, தாலுகா அலுவலகங்களிலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரபோஸ், நவநீதகிருஷ்ணன், தமிழ், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், வைரம், முருகன், பாரதிசிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ