மேலும் செய்திகள்
குண்டுமல்லி கிலோ ரூ.1,600
28-Dec-2024
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகா தென்பழஞ்சி, வேடர் புளியங்குளம், சாக்கிலிப்பட்டி, நிலையூர், சூரக்குளம் உள்பட பல்வேறு கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் மல்லிகை செடிகள், நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது.விவசாயிகள் கூறியதாவது: பொதுவாக கார்த்திகை, மார்கழியில் விளைச்சல் குறையும். இந்தாண்டு பெய்த மழையால் பலரது தோட்டங்களில் செடிகள் பட்டுப் போய்விட்டன. தற்போது கிலோ ரூ. 600 ரூபாய்க்கு மேல் விலை இருக்கிறது. ஆனால் விளைச்சல் இல்லை.ஆண்டின் பல மாதங்களில் மல்லிகை விலை குறைந்து விடும். அப்போது பறிப்பு கூலிகூட கிடைக்காமல் பூக்களை செடிகளில் விட்டு விடுவோம். இதுபோன்ற நேரத்தில் விலை இன்றியும், பனிக்காலங்களில் பூக்கள் இன்றியும் மல்லிகை விவசாயிகள் சிரமப்படுகிறோம்.முருங்கை மரங்களைப் பொறுத்தவரை அதிக மழை பெய்தால் தண்ணீர் தேங்கி விளைச்சல் பாதிக்கும். இந்த இரண்டு மாதங்களில் கிலோ ரூ. 200 வரை விலை போகும். சாதாரண நாட்களில் ரூ.20 முதல் ரூ.60 வரை விலை போகும். பனிக் காலங்களிலும் மல்லிகை செடிகளில் பூக்கள் பூக்கவும், முருங்கையில் இலைகள் உதிராமல் இருக்கவும் தொழில் நுட்பம் வழங்க வேண்டும். இப்பகுதியில் பூக்களை சேமிக்க குளிர்சாதன மையம் அமைக்க வேண்டும் என்றனர்.
28-Dec-2024