| ADDED : ஜன 13, 2026 06:24 AM
மதுரை: பனிப்பொழிவால் பூ உற்பத்தியும் வரத்தும் குறைந்ததால் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் நேற்றும் கிலோ ரூ.6000க்கு மல்லிகை விற்கப்பட்டது. ஒரு வாரமாக மல்லிகை விலையில் மாற்றமின்றி தினமும் ரூ.6000 - ரூ.7000க்கு விற்பனை யாகிறது. நேற்று முல்லை கிலோ ரூ.1500, பிச்சி, மெட்ராஸ் மல்லி ரூ.1200, கனகாம்பரம் 600 - 700, பட்டன்ரோஸ், டிங்டாங் வரை ரோஸ் 150 - 200, மருகு 50, செவ்வந்தி 10 - 80 வரை, அரளி 200க்கு விற்றது. தாமரைப்பூ ஒன்றின் விலை ரூ.10. செவ்வந்தியும் செண்டுப் பூவும் வரத்து அதிகரிப்பால் விலை போகாமல் ஏமாற்றியது. காலையில் தரமான செவ்வந்தி, செண்டுப்பூ கிலோ ரூ.80 வரை விற்ற நிலையில், அடுத்து வாங்குவதற்கு ஆளின்றி விலை ரூ.20க்கும் கீழே குறைந்தது. கடந்த பொங்கலுக்கு கிலோ ரூ.2000 முதல் ரூ.2500க்கு விற்ற மல்லிகை, ஜன.15 வரை, வரத்து குறைவால் விலையில் மாற்றமின்றி ரூ.6000 முதல் ரூ.7000 வரை தொடரும் என்கின்றனர் வியாபாரிகள். தொடர்ந்து வெயில் அதிகரித்தால் மட்டுமே மல்லிகை உற்பத்தி அதிகரித்து விலை குறைய ஆரம்பிக்கும்.