உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பன்னீர்செல்வம் மீது நம்பிக்கை குறைபாடு என்னிடம் சொன்னார் ஜெயலலிதா உதயகுமார் சொல்கிறார்

பன்னீர்செல்வம் மீது நம்பிக்கை குறைபாடு என்னிடம் சொன்னார் ஜெயலலிதா உதயகுமார் சொல்கிறார்

மதுரை : ''பன்னீர்செல்வத்தின் மீது நம்பிக்கையை குறைபாட்டில்தான் ஜெயலலிதா இருந்தார். இதை என்னிடமே அவர் தெரிவித்தார். அதை நான் வெளியே பகிர்ந்தால் அரசியல் நாகரிகமாக இருக்காது'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.மதுரையில் நேற்றுமுன்தினம் உதயகுமார் குறித்து பேட்டி அளித்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'ஜெ., பேரவை டாக்டர் வெங்கடேஷ் எந்த சோபாவில் அமர்ந்திருந்தார், உதயகுமார் அங்கு எப்படி இருந்தார் என்று சொன்னால் அரசியல் நாகரிகமாக இருக்காது' என தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று மதுரையில் உதயகுமார் கூறியதாவது: ஜெயலலிதா நற்சான்று கொடுத்தார் என்று பன்னீர்செல்வம் அடிக்கடி தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். தேனி மாவட்டத்தில் இவர் தான் அதிகாரம் மையம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, 2010ல் முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்திற்கு இவரை தள்ளி வைத்துவிட்டு என்னைதான் தலைமை தாங்க ஜெயலலிதா உத்தரவிட்டார்.பன்னீர்செல்வம் மீது ஜெயலலிதா நம்பிக்கை குறைபாட்டில்தான் இருந்தார். அவர் மீது வைத்திருந்த அபிமானத்தை பற்றி என்னிடம் ஜெயலலிதா பகிர்ந்து இருந்தார். அதை நான் வெளியே சொன்னால் அரசியல் நாகரிகமாக இருக்காது.சோபாவில் வெங்கடேஷ் அமர்ந்திருந்த போது இந்த உதயகுமார் எந்த இடத்தில் அமர்ந்திருந்தேன் எனச் சொல்லுங்கள். நீங்கள் உட்கார்ந்து இருந்த இடத்திலே தான் நானும் உட்கார்ந்திருந்தேன். என் மீதும், என் விசுவாசத்தின் மீதும் ஒரு தவறான அபிப்பிராயத்தை நீங்கள் கற்பிக்க முயற்சிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.கட்சி ஒற்றுமையாக இருப்பதற்கு யாருமே தடையாக இல்லை. உங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பதுதான் பிரச்னையே. எத்தனை முறை சமாதான பேச்சு வார்த்தைகள் நேரடியாக நடந்தது என உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். ஒற்றுமைக்கு நாங்கள் தடையாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். பழனிசாமி உத்தரவிட்டால் இந்த நிமிடமே எனது பொறுப்புகளை துறக்க தயாராக இருக்கிறேன்.இன்றைக்கு கட்சி வேட்டி கட்டக்கூட முடியாத ஒரு நிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்கான காரணம் குறித்து நீங்கள் ஒரு நிமிடம் யோசித்தால் உண்மையான விடை கிடைக்கும் என்றார்

பன்னீர்செல்வம் ஒரு கொசு

சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்அளித்த பேட்டி:பன்னீர்செல்வம் ஒரு கொசு. நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும்போது, கொசு குறித்து பேச நேரமில்லை. தேர்தலில் அ.தி.மு.க.,வை வெற்றிபெற வைக்கும் ரகசியம், தன்னிடம் உள்ளதாக கூறியிருக்கிறார். 'நீட்' தேர்வை விலக்கும் ரகசியம் உள்ளது என, உதயநிதி கூறினார். தி.மு.க.,வுடன் கள்ளத்தொடர்பு வைத்ததால், அந்த நோய் அவருக்கும் தொற்றி விட்டது. இருமொழிக் கொள்கை தான் அ.தி.மு.க.,வின் கொள்கை. விரும்புவோர் ஹிந்தி உட்பட எந்த மொழியையும் கற்கலாம். ஆனால், ஹிந்தி திணிப்பை ஏற்க முடியாது. மத்திய பா.ஜ., அரசு தமிழகத்திற்கு நிதி கேட்டால் மறுக்கிறது. குஜராத்திற்கு கொடுக்கின்றனர். மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என சொல்வது, அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல்.மிழகத்தின் உரிமைகளை, அ.தி.மு.க., ஒருபோதும் விட்டு கொடுக்காது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை