உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பல் டாக்டர் வீட்டில் நகை திருடியவர் கைது

 பல் டாக்டர் வீட்டில் நகை திருடியவர் கைது

புதுக்கோட்டை: பல் டாக்டர் வீட்டில் திருடு போன, 24 பவுன் நகைகளை மீட்டு, குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை நகர் பகுதியில், பல் டாக்டர் ஆனந்த் என்பவரது வீட்டில், 20ம் தேதி மர்ம நபர் புகுந்து, பீரோவில் இருந்த 24 பவுன் நகையை திருடி தப்பினார். புதுக்கோட்டை டவுன் போலீசார், தனிப்படை அமைத்து விசாரித்தனர். அதன்படி, குமாரபாளையத்தை சேர்ந்த சுந்தர்ராஜ், 39, என்பவரை நேற்று கைது செய்து, அவரிடமிருந்து, 24 பவுன் நகைகளையும் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ