உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

மதுரை: டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோள பயிர்களில் உருவான படைப்புழு தாக்குதலை வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் ஆய்வு செய்தார். மதுரை விவசாய கல்லுாரி பேராசிரியை மாரீஸ்வரி, இணை பேராசிரியர் சுரேஷ், உதவி இயக்குநர் ராமசாமி, வேளாண் அலுவலர் சரவணகுமார் குழுவினர் வி.ரெட்டிரபட்டி, ந.முத்துலிங்காபுரம், பி.சுப்புலாபுரம் பகுதியில் படைப்புழு தாக்கிய வயல்களை ஆய்வு செய்தனர்.இணை இயக்குநர் சுப்புராஜ் கூறுகையில், புரட்டாசி, ஐப்பசி பட்டங்களில் சாகுபடி செய்த வயல்களில் படைப்புழு தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது. வளர்ச்சி நிலையில் உள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு 100 மி.கி. இமாம்மெக்டின் பென்சோயேட் அல்லது 100 மி.லி. ஸ்பைனிடோரம் மருந்தை தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறி, ஒரு விளக்கு பொறி வைத்து படைப்புழுவை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை