பேரையூரில் கானல் நீராகும் கல்லுாரி கனவு
பேரையூர்: பேரையூர் பகுதி மாணவர்களின் கல்லுாரி கனவு கானல் நீராகி வருகிறது. இத்தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, சேடபட்டி யூனியனில் 72 ஊராட்சிகள் மற்றும் எழுமலை, பேரையூர், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் குறிப்பாக பெண்கள் பலர் உயர்கல்வியை பயில கல்லுாரிக்கு அனுப்புவதே இல்லை. திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மாணவியரின் கல்லுாரி கனவுகள் கானல் நீர் ஆகிவிடுகிறது. காலை, மாலையில் குறைவான பஸ் போக்குவரத்து பள்ளி, கல்லுாரிகளுக்கு நீண்டதுார பயணம் என இப்பகுதி மாணவர்கள் உயர்கல்வியை தொடர முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இங்கு எந்த ஒரு கல்லுாரியும் இல்லாததே காரணமாக உள்ளது. கல்லுாரிக்கு செல்ல 40 கி.மீ., துாரம் பயணிக்க வேண்டி இருப்பதால் பலர் கல்லுாரியில் படிக்காமல் உள்ளனர். கல்லுாரி கனவுகளை நினைவாக்கும் விதமாக பேரையூரில் அரசு கல்லுாரி துவக்க வேண்டும்.