உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் கம்பன் கழக விழா டிச.6 முதல் 8 வரை நடக்கிறது

மதுரையில் கம்பன் கழக விழா டிச.6 முதல் 8 வரை நடக்கிறது

மதுரை : மதுரைக் கம்பன் கழக அறக்கட்டளையின் ஆண்டு விழா, அவ்வை - பாரதி விழா ஆண்டாள்புரம் வசுதாரா வளாகத்தில் டிச. 6 முதல் 8 வரை நடக்கிறது.பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நடக்கும் முதல் நாள் விழாவில் மாலை 6:00 மணிக்கு பேராசிரியர் பத்மலட்சுமி சீத்தாராமன் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்கிறார். எஸ்.பி.ஐ., வங்கி மண்டலத் தலைவர் ஹரிணி எழுதிய 'கம்பனைச் சந்திப்போம்' நுாலின் முதல் பிரதியை 'பப்பாசி' தலைவர் சேது சொக்கலிங்கம் பெறுகிறார். தியாகராஜர் கல்லுாரி செயலாளர் ஹரி தியாகராஜனும், இரவு 7:00 மணிக்கு 'வால்மீகியும் கம்பனும்' தலைப்பில் சுவாமி சிவயோகானந்தாவும் பேசுவர்.இரண்டாம் நாள் அவ்வை - பாரதி விழாவில் மாலை 6:00 மணிக்கு பதஞ்சலி சில்க்ஸ் சரவணன், நந்தா குழுமத் தலைவர் பரத் கிருஷ்ண சங்கர் பங்கேற்கின்றனர். சென்னை இசைக்கவி ரமணன் 'அவ்வையாரும் கண்ணதாசனும்' தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகிறார். இரவு 7:00 மணிக்கு பாலா நந்தகுமார் குழுவின் 'பாஞ்சாலி சபதம்' நாட்டிய நாடகம் நடக்கிறது.மூன்றாம் நாள் காலை 10:00 மணிக்கு திண்டுக்கல் கம்பன் கழகத் தலைவர் சுந்தரராஜன் முன்னிலையில் விவாத மேடை நிகழ்ச்சி நடக்கிறது. பேச்சாளர் பாரதி பாஸ்கர் தலைமையில் 'அவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் உதவிய பாத்திரம்' குறித்து பேச்சாளர்கள் கண்ணன், ராஜ்குமார், மாது பேசுகின்றனர். மாலை 5:30 மணிக்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா பார்வையற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறார். பின் 'நினைவில் நிற்கும் இலங்கை ஏந்தல்' தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. ராஜா நடுவராக பங்கேற்க பேச்சாளர்கள் தெய்வானை, கவிதா ஜவஹர், மாது, சரவணச்செல்வன், ரேவதி சுப்புலட்சுமி, பாரதி பாஸ்கர் பேசுகின்றனர்.கழகம் நடத்திய சான்றிதழ் வகுப்பு, பேச்சு, இசை, கட்டுரை, ஒப்புவித்தல், ஓவியப் போட்டிகளில் முதல் 3 இடங்களை வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகின்றன.2025 ஜன. 16ல் பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம், பிப். 20ல் சரவணச் செல்வன், மார்ச் 19ல் அருணகிரி, ஏப். 16ல் காந்திமதி, மே 21ல் யாழ் சந்திரா, ஜூன் 18ல் முருகேசன், ஜூலை 16ல் சங்கீத் ராதா, ஆக. 20ல் அக்பர் அலி, செப். 17ல் சாந்தி குமார சுவாமிகள், அக். 15ல் கருப்புசாமி, நவ. 19ல் சுரேஷ் ஆகியோர் வசுதாரா வளாகத்தில் சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை