| ADDED : மே 30, 2024 12:26 PM
மதுரையில் திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு தியாகராசர் கல்லூரியில் இன்று தொடங்கி 18 நாட்கள் நடக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு;கம்பராமாயண தொடர் சொற்பொழிவுமதுரை தியாகராசர் கல்லூரியும் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு இன்று வியாழன் தொடங்கி 18 நாட்கள் மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ராதா தியாகராசர் அரங்கில் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இதனை தியாகராசர் கல்லூரி செயலாளர் ஹரி தியாகராஜன் தொடங்கி வைக்கிறார் தலைப்புகள்
இன்று வியாழக்கிழமை கம்பர் பெருமை 31ஆம் தேதி ராம அவதாரம்,1 ஆம் தேதி விசுவாமித்திரர் வேள்வி காத்தல் 2ஆம் தேதி ஸ்ரீ சீதா கல்யாணம் 3 ஆம் தேதி இரண்டு வரம் 4 ஆம் தேதி அழியா அழகன் 5 ஆம் தேதி குகன் பக்தி 6 ஆம் தேதி பாதுகா பட்டாபிஷேகம் 7 ஆம் தேதி மாயமான் 8 ஆம் தேதி சுக்ரீவன் நட்பு 9 ஆம் தேதி வாலி மோட்சம் 10 ஆம் தேதி சீதையை தேடல் 11ஆம் தேதி அசோகவனத்தில் அன்னை 12ஆம் தேதி கண்டேன் தேவியை 13-ஆம் தேதி பிரகலாத சரித்திரம் 14ஆம் தேதி விபீஷண சரணாகதி 15 ஆம் தேதி இன்று போய் நாளை 16 ஆம் தேதி நிறைவு நாளில் ஸ்ரீ ராம பட்டாபிஷேகம்ஆகிய தலைப்புகளில் கலைமாமணி திருச்சி கல்யாணராமன் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.