உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கந்த சஷ்டி ஆலோசனை

கந்த சஷ்டி ஆலோசனை

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சம்பந்தமான ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் நடந்தது.அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணி செல்வம், சண்முகசுந்தரம், ராமையா, துணை கமிஷனர் சூரியநாராயணன் பங்கேற்றனர். நவ. 2 முதல் 8 வரை நடக்கும் திருவிழாவில் கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்ளும் பெண்களுக்கு நீராடும் வசதி, பாதுகாப்பு, விரதம் மேற்கொள்ளும் வசதி, பக்தர்கள் சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள், கிரிவல பாதையில் குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துதல். விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு இலவசமாக தினை மாவு, எலுமிச்சம் பழச்சாறு, பால் வழங்குவது குறித்து ஆலோசித்ததாக அறங்காவலர் குழுத் தலைவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை