உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சவால்களை எதிர்கொள்ள கனிமொழி எம்.பி., அறிவுரை

சவால்களை எதிர்கொள்ள கனிமொழி எம்.பி., அறிவுரை

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி 30வது பட்டமளிப்பு விழா நடந்தது. செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், துணைத் தலைவர் ஜெயராம், உதவிச் செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, முன்னாள் தலைவர் ராஜகோபால் பங்கேற்றனர்.கனிமொழி எம்.பி., பேசுகையில், ''இந்த உலகமானது பல சவால்களையும் புதிய தருணங்களையும் உங்களுக்கு உருவாக்கும். அதை எதிர்கொண்டு வெற்றி பெற தயாராக இருக்க வேண்டும்'' என்றார்.சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சரவணன், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் சூரியநாராயணன், சீனிவாசன், ரங்கராஜன், நாராயணசாமி, கணேசன், வேணுகோபால், கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டனர்.52 மாணவர்களுக்கு பதக்கங்கள், 1213 மாணவர்களுக்கு பட்டங்களை செயலாளர் ஸ்ரீதர் வழங்கினார். இயற்பியல் துறை தலைவர் ஜெயபாலகிருஷ்ணன், பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.நிகழ்ச்சியின்போது கனிமொழி சகோதரர் முத்து இறந்த தகவல் கிடைத்ததால் பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்டு அவசரமாக புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி