உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கராத்தே வீரர்கள் சாதனை

கராத்தே வீரர்கள் சாதனை

மதுரை: சென்னை பிரைம் ரோஸ் பள்ளியில் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல அளவிலான சி.ஐ.எஸ்.சி.இ., பள்ளிகளுக்கு இடையிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் மதுரை சோபுக்காய் கோஜூரியூ பள்ளி சார்பில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 19 வயதுக்குட்பட்டோர் சண்டை பிரிவில் சுவாதிகா தங்கப்பதக்கம், 17 வயது பிரிவில் சூரிய சித்தார்த் வெள்ளிப்பதக்கம் வென்றனர். செப்.15ல் கர்நாடகாவில் நடக்க உள்ள தேசிய கராத்தே போட்டிக்கு சுவாதிகா தேர்வாகினார். தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் அங்குவேல், பயிற்சியாளர் தணிகைவேல் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை