மேலும் செய்திகள்
சிவன்மலை கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
14-Dec-2024
பேரையூர், : பேரையூர் மேலப்பரங்கரி சுப்பிரமணியசாமி கோயில் சரவணப் பொய்கை மலை மீது இன்று, நாளை, நாளை மறுநாள் மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது.இந்த மலை மீது பழமை வாய்ந்த பூஜ்ஜியம் மல்லிகா அர்ஜுனா லிங்கசுவாமி கோயில் உள்ளது. இங்கு நான்கரை அடி தீப கொப்பரையில் ஆறு அடி தென்னை மரத்தில் சுற்றப்பட்ட திரியில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், பசு நெய் ஆகியவற்றுடன் ஒரு நாளில் 500 லிட்டர் மூலிகைப் பொருட்களுடன் ஒவ்வொரு நாளும் இந்த மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது.இந்த தீப கொப்பரை திருவண்ணாமலையில் உள்ள லோபமாதா அகஸ்தியர் ஆசிரமம் வாயிலாக கடந்தாண்டு டிச. 2 ல் பேரையூர் கொண்டு வரப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று ஏற்றப்படும் தீபத்தை பேரையூர் வட்டார மக்களும் தங்கள் வீட்டு மாடியில் இருந்து தரிசிக்கலாம். 200 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த மகாதீபம் ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
14-Dec-2024