உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அடிப்படை வசதியில்லாத கீழ் மதுரை ரயில்வே ஸ்டேஷன்

அடிப்படை வசதியில்லாத கீழ் மதுரை ரயில்வே ஸ்டேஷன்

மதுரை : மதுரை நகரில் அமைந்துள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் ராமேஸ்வரம் வழிதடத்தில் உள்ள கீழ்மதுரை ஸ்டேஷனும் ஒன்று. மானாமதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்வோரில் அதிகம் பேர் இந்த ஸ்டேஷனை பயன்படுத்துகின்றனர்.அதற்கேற்ப ஸ்டேஷனில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. தெப்பக்குளம், அண்ணாநகர், அனுப்பானடி, சிந்தாமணி, முனிச்சாலை பகுதி மக்களுக்கு வசதியாக உள்ள இந்த ஸ்டேஷன், ரயில்வே துறையை பொறுத்தவரை 'புறக்கணிக்கப்பட்டதாகவே' உள்ளது. பயணிகளுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை.குறிப்பாக ரயில் பெட்டி வாசலும், நடைமேடையும் இணையாக இல்லாமல் 3 அடி குறைவாக உள்ளதால் பயணிகள் ஏறவும், இறங்கவும் சிரமப்படுகின்றன.கர்ப்பிணிகள், வயதானவர்கள் நிலைமை பரிதாபம். ஸ்டேஷனில் 3 நிமிடங்கள் மட்டுமே ரயில் நிற்கும் என்பதால் கர்ப்பிணிகள் ரயிலில் ஏறுவதற்குள் 'பிரசவ வலி' வந்துவிடும். தவிர ஏறும்போது தவறி விழுந்து இறந்தவர்களும் உண்டு.அந்த அளவிற்கு ஸ்டேஷன் படுமோசமாக உள்ளது. ஒருவழியாக பயணிகளை ரயிலில் ஏற்றிவிட்ட நிம்மதியில் உறவினர் தண்ணீர் குடிக்கலாம் என்று அங்குள்ள குழாய்களை திறந்தால் 'புஸ்....' என்று காற்றுதான் பெருமூச்சாக வருகிறது.ரயில்வே அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.பாவம் போக்க ராமேஸ்வரம் செல்லும் பயணிகளின் 'பாவத்தை' ரயில்வே நிர்வாகம் சுமக்க வேண்டாம் என ரயில் பயணிகள் குமுறுகின்றனர்.இதனிடையே ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் செல்வத்திடம் நடைமேடையை 3 அடி உயர்த்தி அமைக்குமாறு தெற்கு தொகுதி ம.தி.மு.க., எம்.எல்.ஏ., பூமிநாதன் மனு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி