உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மண்ணெண்ணெய் குண்டு வீசியவர் கைது

மண்ணெண்ணெய் குண்டு வீசியவர் கைது

சோழவந்தான்: மன்னாடிமங்கலம் கல்லாங்காடு அழகர் மகன் முத்தையா 19. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா 54. கருப்பையாவின் தாயாரின் இறுதி ஊர்வலத்தில் வெடி போடுவதில் இவருக்கும் வாலிபர் சிலருக்கிடையே தகராறு, தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் முத்தையா போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிலிருந்த கண்ணாடி பாட்டிலினாலான மண்ணெண்ணெய் விளக்கை குண்டாக பயன்படுத்தி கருப்பையா வீட்டின் மீது வீசியுள்ளார். யாருமில்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. முத்தையாவை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !