மேலும் செய்திகள்
கிடாமுட்டு போட்டி உயர்நீதிமன்றம் அனுமதி
11-Apr-2025
மதுரை : விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி முத்துப்பாண்டி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:கல்புளிச்சான்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி மே 10 ல் கிடாமுட்டு போட்டி நடத்த அனுமதி, போலீஸ் பாதுகாப்பு கோரி கலெக்டர், எஸ்.பி.,விக்கிரமங்கலம் போலீசாரிடம் மனு அளித்தோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு நிபந்தனைகளை பின்பற்றி போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
11-Apr-2025