உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிடா முட்டு போட்டிஉயர்நீதிமன்றம் அனுமதி

கிடா முட்டு போட்டிஉயர்நீதிமன்றம் அனுமதி

மதுரை: மதுரை மாவட்டம் தொட்டப்பநாயக்கனுாரில் நிபந்தனைகளை பின்பற்றி கிடா முட்டு போட்டி நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதித்தது.கிடா முட்டுவோர் சங்கம் தலைவர் ரமேஷ் தாக்கல் செய்த மனு:தொட்டப்பநாயக்கனுாரில் ஜக்கம்மாள் கோயில் கும்பாபி ேஷக விழாவையொட்டி இன்று (பிப்.,10) கிடா முட்டு போட்டி நடத்த அனுமதி கோரி எஸ்.பி., மற்றும் உசிலம்பட்டி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மனு அனுப்பினேன். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப்: 'கிடா-முட்டு'வை போலீஸ் இன்ஸ்பெக்டர், அருகிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனை டாக்டர் கண்காணிக்க வேண்டும். ​​ஆடுகளுக்கு எந்த காயமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மது போதை புகட்டக்கூடாது. கொம்புகளில் நச்சுப் பொருட்கள் இடம்பெறக்கூடாது. இதை போட்டி துவங்கும் முன் கால்நடை டாக்டர் உறுதி செய்ய வேண்டும். போலீஸ் பாதுகாப்பு, டாக்டருக்கான செலவுகளை மனுதாரர் ஏற்க வேண்டும். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்பாட்டாளர்கள் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை