உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொட்டாம்பட்டி டூ கருங்காலக்குடி குப்பையிலும் நல்லாவே காசு பார்க்கிறாங்க...

கொட்டாம்பட்டி டூ கருங்காலக்குடி குப்பையிலும் நல்லாவே காசு பார்க்கிறாங்க...

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் சேகரிக்கப்பட்ட மக்காத கழிவுகளை பேட்டரி வாகனங்களில் கருங்காலக்குடிக்கு கொண்டு செல்வதால் பணிகள் பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த ஒன்றியத்திற்குட்பட்ட 27 ஊராட்சிகளில் துாய்மை பாரத திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கழிவுகளை சேகரிக்க ரூ 2.80 லட்சம் மதிப்பீட்டில் நுாற்றுக்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இதில் துாய்மை காவலர்கள் சேகரிக்கும் கழிவுகளை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து பணித்தள பொறுப்பாளர் முன் பழைய இரும்பு கடையில் எடை போட்டு அதற்குரிய பணத்தை அந்தந்த ஊராட்சி செயலரிடம் கொடுப்பது வழக்கம்.ஆனால் நேற்று ஒன்றியம் முழுவதிலும் உள்ள மக்காத பொருட்களையும், துாய்மை பணியாளர்களையும் பேட்டரி வாகனத்துடன் ஒன்றிய அதிகாரிகள் கருங்காலக்குடிக்கு வரவழைத்தனர். அங்கு வியாபாரியிடம் விற்பனை செய்தனர்.துாய்மை காவலர்கள் கூறியதாவது: மக்காத கழிவுகளை வாகனங்களில் ஏற்றி கருங்காலக்குடிக்கு கொண்டு செல்வதால் கழிவுகளை சேகரிக்கும் பணிகள் பாதிப்பதோடு, நுாற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கிறோம். 15 கி.மீ., துாரம் பேட்டரி வாகனத்தில் செல்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தவிர வியாபாரியின் லாப நோக்கத்திற்காக எங்களை சிரம படுத்துகின்றனர். அதனால் பழைய நடைமுறையை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை