மேலும் செய்திகள்
தண்டோரா' போட்டு பா.ஜ.,வினர் அழைப்
18-Dec-2024
மதுரை: கோவில்பாப்பாக்குடி ஊராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.கோவில்பாப்பாக்குடி ஊராட்சியில் சிக்கந்தர் சாவடி, தினமணி நகர் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவ்வூராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைத்திட்டம் பாதிப்பு, வரி உயர்வு போன்றவை ஏற்படும் எனக்கூறி மாநகராட்சியுடன் இணைய எதிர்ப்பு தெரிவித்து நுாற்றுக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்தனர்.அவர்கள் கூறியதாவது: ஊராட்சியுடன் இருப்பதால் ரோடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் ஊராட்சி மூலம் உடனுக்குடன் கிடைக்கிறது. மாநகராட்சியுடன் இணைந்தால் இதுபோன்ற பணிகள் ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்கப்படும். இங்குள்ள மக்களின் வருமானம் மாநகராட்சி விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப இல்லை. எனவே ஊராட்சியாகவே தொடர விரும்புகிறோம் என்றனர்.
18-Dec-2024